விடுதலை வீரர்கள் முன்னுரை நாட்டின் 73 வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு இன்னல்களுக்கு பிறகு சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்த தலைவர்கள் சிலரைப் பற்றி இக்கட்டுரையில் நினைவு கூர்வோம். மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர். சுதந்திர இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாட்டின் விடுதலைக்கு வழிகாட்டியாக இருந்தார். பொய் கூறாமை, அசிம்சை ஆகியவை காந்தியடிகளின் உறுதியான கொள்கைகள். சத்திய சோதனை அவர்கள் எழுதிய சுய சரிதை நூலாகும். மகாகவி பாரதியார் கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்கள் கொண்டவர். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். திருப்பூர் குமரன் இளம் வயதிலேயே நாட்டு பற்று மிக்கவராக திகழ்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தின் போது , தடியடியில் காயமடைந்தும் தேசிய கொடியை கீழே விழாமல் தாங்கி "...
Comments
Post a Comment