Vidudhalai Veerargal


விடுதலை வீரர்கள் 

முன்னுரை

நாட்டின் 73வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு இன்னல்களுக்கு பிறகு சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்த தலைவர்கள் சிலரைப் பற்றி இக்கட்டுரையில் நினைவு கூர்வோம்.

மகாத்மா காந்தி 
இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர். சுதந்திர இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாட்டின் விடுதலைக்கு வழிகாட்டியாக இருந்தார். பொய் கூறாமை, அசிம்சை ஆகியவை காந்தியடிகளின் உறுதியான கொள்கைகள். சத்திய சோதனை அவர்கள் எழுதிய சுய சரிதை நூலாகும்.

மகாகவி பாரதியார் 
கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்கள் கொண்டவர். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். 

திருப்பூர் குமரன் 
இளம் வயதிலேயே நாட்டு பற்று மிக்கவராக திகழ்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க  போராட்டத்தின் போது , தடியடியில் காயமடைந்தும்  தேசிய கொடியை கீழே விழாமல் தாங்கி  "வந்தே மாதரம் வந்தே மாதரம்" என்று முழங்கி கொண்டே தன்னுயிர் நீத்தார் . கொடி காத்த குமரனாக இன்றும் நம்முள் வாழ்கிறார்.

வ.உ.சிதம்பரனார் 
ஆங்கிலேயருக்கு  எதிர்ப்பாக  முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். வ.உ.சி தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்படுபவர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 
இந்திய விடுதலைப் போராட்டத்தை தனி வழியில் நடத்திச்சென்றவர். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க்கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அப்படை மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார் . 

ஜவகர்லால் நேரு 
இந்தியாவின் முதல் பிரதமரானார்  நேரு.  இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியானவர்.

முடிவுரை
எண்ணற்ற வீரர்கள் போராடி, தன்னுயிர் நீத்து விடுதலை பெற்று தந்தார்கள். நாம் அனைவரும் அதை நல்ல விதமாக பேணி பாதுகாத்து நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும்.  




Comments

Popular posts from this blog

My sweet daugher

A beautiful flower